×

ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவு

சென்னை: சென்னை: சென்னையில் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகள் சிலரால் படுகொலை செய்யபட்டார். இதனை அடுத்து சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியேற்றதுமே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கமிஷனர் அருண் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கண்காணிக்க வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

The post ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rauds ,Chennai ,Commissioner ,Arun ,Bagujan Samaj Party ,Armstrong Rawoudi ,Sandeep Rai Rathore ,
× RELATED பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர்...