×

பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் பலி

சென்னை: பைக் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் பலியாகினர். தண்டையார்பேட்டையை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் வல்லரசு (21), சேலம் ஆத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் ரெங்கநாதன் (22). இவர்கள் இருவரும், பாதிதாசன் பல்கலைக் கழகத்தில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நல்லான் என்பவரின் மகன் லெனினும் (21) அதே பல்கலையில் 3ம் ஆண்டு வாழ்க்கை அறிவியல் படித்து வந்தார். 3 பேரும் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 3 பேரும், ஒரே பைக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்சி சென்றனர். மாத்தூர் காவல் நிலையம் முன்பு சென்றபோது, எதிரே வந்த லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், வல்லரசு, ரெங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயமடைந்த லெனினை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்தார். விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதி 3 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vallarasu ,Sampath ,Thandaiarpet ,Renganathan ,Subramanian ,Salem Attur ,Pathidasan University ,Dinakaran ,
× RELATED சாக்கடை வடிகால் பணிக்காக...