×

இன்று ‘லீப்’ தினம்: டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்

புதுடெல்லி: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதியை ‘லீப்’ ஆண்டு தினம் என்பார்கள். அதன்படி இன்று பிப். 29ம் தேதி என்பதால், இன்றைய தினத்தை கொண்டாடும் வகையில் ‘லீப்’ தின ‘டூடுல்’ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில் பிப். 28க்கும் மார்ச் 1ம் தேதிக்கும் இடையே பிப். 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது. தவளை தாவிச் செல்லும்போது பிப். 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இன்று ‘லீப்’ தினம்: டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள் appeared first on Dinakaran.

Tags : Leap Day ,Google ,New Delhi ,Leap' ,Leap' Day ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...