புதுடெல்லி: நைஜீரியா நாட்டை சேர்ந்த பிராங்க் என்பவர் அவர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவரது கூகுள் லொகேஷனை விசாரணை அதிகாரியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு பிராங்க் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ” குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தங்களது இருப்பிடங்களை பகிர்ந்து கொள்வதும், அதை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதும் ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனையாக இருக்க முடியாது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் தனியுரிமையை கிட்டத்தட்ட எட்டிப்பார்க்கும் விதமாகவும் ஜாமீன் நிபந்தனைகள் இருக்கக் கூடாது. எனவே இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
The post ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்களின் கூகுள் லொக்கேஷனை கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.