×

மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டதாவது; மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் – ஐ தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Manjummal Boys ,Chennai ,Minister Assistant Secretary ,Stalin ,
× RELATED மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!