×

நல்லூரில் புதியதாக கட்டிய திமுக அலுவலகத்தை செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்

உடுமலை, பிப்.29: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழக உரிமைகளை மீட்கவும், இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், உடுமலை நகர திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.

உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை மற்றும் நகர திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும், திமுக அரசின் சாதனைகளை கூறியும் பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 27, 31, 32, 33 ஆகிய வார்டுகளில் நடந்த இந்த பிரச்சாரத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post நல்லூரில் புதியதாக கட்டிய திமுக அலுவலகத்தை செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Selvaraj ,MLA ,DMK ,Nallur ,Udumalai ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Stalin ,Dinakaran ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா