×

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்

கெங்கவல்லி, பிப்.29: கெங்கவல்லி அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் வேல்முருகன். விவசாயியான இவருக்கு சொந்தமான நிலத்தில், பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளத்தை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கெங்கவல்லிக்கு சென்று இறக்கி விட்டு, மீண்டும் தோட்டத்துக்கு வந்து கொண்டு இருந்தார். வலசக்கல்பட்டி பிரிவு சாலையில், கணேசபுரம் செல்லும் வழியில், எதிர்பாராத விதமாக வளைவு பகுதியில் 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேல்முருகனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம், பள்ளத்தில் கிடந்த டிராக்டரை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Velmurugan ,Duraisamy ,Ganesapuram ,Valasakalpatti ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்