×

வியாபாரிகளை மிரட்டிய பாஜ பிரமுகர் மீது வழக்கு வேலூரில் கட்சிக்கு நிதி கேட்டு

வேலூர், பிப்.28: வேலூரில் கட்சிக்கு நிதி கேட்டு வியாபாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் கலீல்(33), வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக். இவர் பாஜக சிறுபான்மை பிரிவு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி கலீலிடம் சென்று பாஜகவுக்காக நிதி வழங்க வேண்டும் என முஸ்தாக் கேட்டாராம். அதற்கு கலீல் கொடுக்க மறுத்ததால் அவரை முஸ்தாக் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதேபோல் அதேபகுதியை சேர்ந்த வியாபாரிகளான சான்பாஷா என்பவரிடம் ₹5 ஆயிரம், அஸ்கர் என்பவரிடம் ₹2 ஆயிரம் கேட்டு முஸ்தாக் மிரட்டினாராம். இதுதொடர்பாக வியாபாரிகள் 3 பேரும் வேலூர் வடக்கு போலீசில் நேற்று முன்தினம் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முஸ்தாக் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வியாபாரிகளை மிரட்டிய பாஜ பிரமுகர் மீது வழக்கு வேலூரில் கட்சிக்கு நிதி கேட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Vellore ,Khalil ,Konavattam ,Mushtaq ,Dinakaran ,
× RELATED வளமான இந்தியாவிற்கு...