×

அவிநாசி அருகே விற்பனை கூடத்தில் ரூ.4.28 லட்சத்துக்கு ஏலம்

 

அவிநாசி, பிப்.28: அவிநாசி அருகே ரூ.4.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், நிலக்கடலை வரத்து குறைந்து இருந்தது. இதனால் நிலக்கடலை விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவிநாசி அருகே சேவூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்திற்கு, வரத்து குறைவாக இருந்தது. 7.14 மெட்ரிக் டன் எடையுள்ள நிலக்கடலை மூட்டைகள் ஏலமையத்துக்கு வந்தன. நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூபாய் ஆயிரம் வரை விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 6750 முதல் ரூ.7000 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6500 முதல் ரூ.6750 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6000 முதல் ரூ.6500 வரையிலும், ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 28 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. நிலக்கடலை ஏலத்தில், 3 வியாபாரிகள், 11 விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் யுவராஜ் செய்திருந்தார்.

The post அவிநாசி அருகே விற்பனை கூடத்தில் ரூ.4.28 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Saveur ,Dinakaran ,
× RELATED அதிகாரத் திமிரில் அராஜகங்களும்,...