×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 12 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் கொலை, வழிப்பறி, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புழல் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த காவாங்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ் (23), வழிப்பறியில் ஈடுபட்ட புரசைவாக்கம் திடீர் நகரை சேர்ந்த ஈஸ்வர் (22), புரசைவாக்கம் மேனா தெருவை சேர்ந்த ஜனார்த் (எ) ஜப்பான் (25), ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த அரவிந்த் (எ) வெட்டுக்கிளி (24), பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரசாந்த் (32), வழிப்பறியில் ஈடுபட்ட மயிலாப்பூரை சேர்ந்த ஸ்ரீதர் (33), குட்கா பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத்கண்ணன் (34), கொளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (36), புழல் மெர்சி நகரை சேர்ந்த பொன்ராஜ் (32), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த வி.பொன்ராஜ் (43), நில மோசடியில் ஈடுபட்ட கொடுங்கையூரை சோந்த ஹேமகுமார் (61), பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாம்பலம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (35) ஆகிய 12 பேரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 12 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Sandeep Rai Rathore ,Dinakaran ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...