×

விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்க முயற்சி அதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் கைது

ஆலந்தூர்: மோதல் தொடர்பாக விசாரணைக்கு சென்ற போலீசாரிடம் தகராறு செய்து, தாக்க முயன்ற அதிமுக பிரமுகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உள்ளகரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (48). அதிமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மது போதையில் தனது பைக்கில் வீட்டிற்கு செல்லும் வழியில், தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து, அங்கு மளிகை கடை நடத்தும் சக்திவேல் மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் தனசேகரனை தூக்கி நிறுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த தனசேகரன், கடைக்காரர் சக்திவேலிடம் ‘என்னுடைய செல்போனை எடுத்தது யார்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, சக்திவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனசேகரனை கீழே தள்ளியுள்ளார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் சக்திவேலின் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் விமல், எஸ்ஐ ராஜேந்திரன், காவலர் கார்த்தி ஆகியோர் சம்பவம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அதிமுக நிர்வாகியின் உறவினர்கள் சிலர் காவலர் கார்த்தியின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட ஆய்வாளர் விமலிடமும் தகராறு செய்துள்ளனர். இதனால், அதிமுக நிர்வாகி தனசேகரன், ரவி, பிரகாஷ், சதீஷ், முருகேசன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்க முயற்சி அதிமுக பிரமுகர் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Adimuga Pramukh ,Alandur ,Supreme Leader ,Dhanasekaran ,Immuga Pramukar ,Dinakaran ,
× RELATED பாஜக, அதிமுகவை ஒருசேர வீழ்த்துவோம்!:...