×

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஜருகுமலை மற்றும் ஜல்லூத்துமலை அடிவாரங்களில் தரிசாக காடுகளாக கிடந்த 1400 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களில் சூரியூர் அத்திபட்டி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி, மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பனமரத்துப்பட்டி ஏரியின் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விட்டதாக 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்தனர். இதையடுத்து, 500க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் நீண்ட காலமாக பயிரிட்டு வந்த அவரவர் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டனர். அந்த நிலங்களை ஏற்கனவே பயிரிட்டு விவசாயம் செய்து வந்த ஏழை விவசாய குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,All India Farmers Maha Sabha ,Salem Fort Ground ,District ,President ,Anbu ,State General Secretary ,Chandramohan ,District Secretary ,Velmurugan ,Dinakaran ,
× RELATED மோடி மீண்டும் பிரதமரானால் சிலிண்டர்...