×

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமா, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு தலா ₹6,690 வீதம் ₹26,760 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,People's Grievance Redressal Day ,Namakkal Collector ,Collector ,Uma ,People's Grievance Day ,District Collector ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை