×

பள்ளி ஆண்டு விழாவில் ஊராட்சி தலைவர் பரிசுகள் வழங்கினார்

 

தாராபுரம், பிப்.27: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா தாராபுரம் வட்டார கல்வி அலுவலர் சுசிலா தலைமையில் வட்டார கல்வி அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, மணிமேகலை, ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சிவராஜன், பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, மயில்வாகனம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் பொன்னுச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கிராமப்புற மாணவ-மாணவிகள் பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் ரஜினிகாந்த் சான்றிதழ்கள், வெற்றி பதக்கங்களை வழங்கினார். பள்ளி ஆசிரியை பாத்திமா பர்வீன் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், நிறைவாக ஆசிரியை ஜெயா நன்றி கூறினார், நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி ஆண்டு விழாவில் ஊராட்சி தலைவர் பரிசுகள் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Nanjiampalayam Panchayat Primary School ,Tarapuram Panchayat Union of Tirupur District ,District Education Officer ,Susila ,Easwaramurthy ,Manimekalai ,Panchayat Council ,President ,Rajinikanth ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...