×

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு 9ம் வகுப்பு மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை: கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டனர்

பெரம்பலூர்: காதல் விவகாரத்தில் 9ம் வகுப்பு மாணவியுடன், கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் யுகேஷ் (20). பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், 15 வயதான 9ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாமா அல்லது தற்கொலை செய்து கொள்ளலாமா என இருந்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர், 18 வயது ஆனவுடன் அந்த பையனுக்கே திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியிலிருந்து இருவரையும் காணாததால் இரு வீட்டாரும் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் காதலன் யுகேஷின் உறவினரான ராஜேஷ் என்பவரது வயல் கிணற்று மேட்டில் காதலர்கள் இருவரது செருப்புகள் கிடந்தது தெரியவந்தது. இதில், சந்தேகமடைந்த பெற்றோர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது இருவரது உடல்கள் மீட்கப்பட்டன. பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு 9ம் வகுப்பு மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை: கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டனர் appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,Krishnamoorthy ,Yukesh ,Ammapalayam village, ,Perampalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...