×

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

பல்லடம், பிப்.24: பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, பல்லடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கழக துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் செய்வது குறித்து பல்லடம் தொகுதி பொறுப்பாளரும், கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளருமான வாசிம் ராஜா விளக்கி பேசினார்.

இந்நிகழ்வில், பல்லடம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆட்டோ குமார், மாவட்ட பிரதிநிதிகள் துரைமுருகன், அன்பரசன், மாவட்ட நெசவாளர் அணி எஸ்.கே.டி சுப்பிரமணி, பிரகாஷ், பல்லடம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், பல்லடம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Palladam ,Palladam West Union ,Palladam West Union League ,Krishna Murthy ,District Corporation ,Deputy ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...