×

கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், பிப்.25: நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (25ம்தேதி) மாலை 5 மணிக்கு நாமக்கல் – மோகனூர் ரோடு முல்லை நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கூட்டத்தில் வரும் 1ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ” என்ற தலைப்பில் தேர்தலுக்கான திண்ணை பிரசாரம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே, கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

The post கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : East District DMK Working Committee Meeting ,Namakkal ,East district DMK working committee ,East District DMK ,Rajesh Kumar ,Namakkal East District DMK Executive Committee Meeting ,East District DMK Executive Committee Meeting ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை