×

ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்

புதுடெல்லி: ஏடன் வளைகுடாவில் கடந்த 22ம் தேதி பலாவ் நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ஐலேண்டர் வணிக கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை இரவு ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. கப்பல் ஊழியர் ஒருவர் காயமடைந்தார். அங்கு சென்ற இந்திய கடற்படை கப்பல் குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்க உதவினர். செங்கடலில் பரவிவரும் எண்ணெய் படலம்: கடந்த 18ம் தேதி பெலீஸ் நாட்டு கொடியுடன் பல்கேரியாவுக்கு சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இதனால் செங்கடல் பகுதியில் 29 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளது.

The post ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : on a ,Gulf of Aden ,New Delhi ,Palau ,ship ,of Aden ,
× RELATED கடற்கொள்ளையர்கள் கடத்திய ஈரான்...