×

ரூ.2 கோடி நில மோசடியில் ஈடுபட்ட பாஜ பிரமுகர் மீது புகார்

காஞ்சிபுரம் : சென்னை – பெங்களுரூ அதிவிரைவு சாலை நில மோசடியில் ஈடுபட்ட பாஜ பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். சென்னை பெங்களூரு இடையே அதிவிரைவு சாலை அமைக்கும் பணி கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடமிருந்து நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நில எடுப்பு விவகாரத்தில் பாஜ பிரமுகர் மாலினி ஜெயச்சந்திரன் போலி ஆவணங்கள் தயார் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, சென்னை பெங்களூரு அதிவிரைவு சாலைக்காக காந்தூர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் என்பவருடைய 1.75 ஏக்கர் நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து, பாஜவை சேர்ந்த மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் ரூ.2 கோடி பெற்றுள்ளார்.

இதுகுறி்த்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் மோசடி குறித்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம். மேலும், இதுபோன்று பல கோடி ரூபாய் மோசடிகள் இந்த அதிவிரைவு சாலை நில எடுப்பில் நிகழ்ந்துள்ளதால் உரிய நபர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே இதனை மாவட்ட குற்றப்பிரிவு முறையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து நரசிம்மன் மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி தனது தரப்பு ஆவணங்களையும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.2 கோடி நில மோசடியில் ஈடுபட்ட பாஜ பிரமுகர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kanchipuram ,Tamil Progress Force ,Veeralakshmi ,Chennai- ,Bengaluru ,Chennai ,Dinakaran ,
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...