×

பாஜவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஓஎஸ் மணியன் உறுதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரான ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ அளித்த பேட்டி: எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஏழை, எளியவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர். எடப்படி பழனிச்சாமி தலைமையை ஏற்று அனைத்து தரப்பு மக்களும் கழகத்தில் தங்களை இணைத்து கொள்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்றும் வரவில்லை. இறுதியாக அட்டவணை வந்த பிறகு தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்போம்.

அதேபோல் தேர்தலுக்கு முதலில் கூட்டணி குறித்து அறிவிப்பு செய்வதில் அதிமுகவாகத்தான் இருக்கும். தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் களம் என்பது அதிமுக-திமுகவுக்கும் தான். 3வது அணிக்கு வாய்ப்பு இல்லை. அப்படியே அமைந்தாலும் வெல்லவும் முடியாது. அது வரலாறாகவும் ஆகாது. அதிமுகவை சேர்ந்த எம்பிக்களோ, எம்எல்ஏக்களோ பாஜவினரை சந்தித்து பேசுகிறார்களா என்றால் கிடையாது. சிறுபான்மை மக்கள் அதிமுகவை ஆதரிக்க தொடங்கி விட்டார்கள். பாஜவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. என்றைக்கும் இல்லை என்று பொதுச்செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஓஎஸ் மணியன் உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,OS ,Manian ,Chief Minister ,Jayalalithaa ,Nagapattinam district AIADMK ,minister ,district secretary ,OS Maniyan ,MLA ,Maniyan ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்