×

எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் திருநீறை அழித்துக் கொண்டு பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை சர்ச்சை பேச்சு

மதுரையில் நடைபெற்ற நடைபயணத்தின்போது பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதாவது: வரும் 27ம் தேதி அன்று பல்லடத்தில் பிரதமர் மோடி, பாத யாத்திரை இறுதி விழாவிற்கு வருகை தருகிறார். மதுரை மக்கள் என்றாலே அரசியல் திறன் மிக்கவர்கள். தூங்கா நகரம், வீரம் விளைந்த மண், தமிழக அரசியலில் திருப்பு முனை, புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் மதுரை தான், அரசியலை முடிக்க வேண்டும் என்றாலும் மதுரையில் தான் நடக்கும். ஓட்டு பெட்டியில் கடைசி ஓட்டு எண்ணும்போதுதான் தெரியும்? யார் வெற்றி பெறுவார் என தெரியும்.

4ம் சங்கம் வளர்த்தவர் பாண்டித்துரைத் தேவர். ஐந்தாம் சங்கம் வளர்த்தவர் மோடிதான். தமிழை உலக நாட்டிற்கு கொண்டு சென்றார். எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநீறை அழித்துக் கொண்டு பங்கேற்றார். அண்ணாமலை லேகியம் விற்பவர் போல் ஊர் ஊராக சுற்றுவதாக என்னைச் சொல்கிறார்கள். நான் லேகியம்தான் விற்கிறேன். 27ம் தேதி பல்லடத்தில் பெரிய லேகியம் விற்கப்போகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் திருநீறை அழித்துக் கொண்டு பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,STBI party conference ,Tiruneerai ,Madurai ,BJP ,President ,Annamalai ,Modi ,Pada Yatra ,Palladam ,Dhonga ,Thiruneerai: ,
× RELATED எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால்...