×

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் மார்ச் 01ம் தேதி முதல் 12ம் தேதி வரை மஹாசிவராத்திரி திருவிழா நடைபெறும் என அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் மார்ச் 01ம் தேதி முதல் 12ம் தேதி வரை மஹாசிவராத்திரி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் எதிர்வரும் 01.03.2024 முதல் 12.03.2024 முடிய மாசி மஹா சிவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது. 01.03.2024 வெள்ளிக்கிழமை கொடியேற்றமும், 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியும், 08.03.2024 வெள்ளிக்கிழமை மஹா சிவராத்திரி அன்று இரவு வெள்ளி ரத புறப்பாடும், 09.03.2024 அன்று திருத்தேரோட்டமும். 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மறைநிலா அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

மேற்படி திருவிழாவில் காலையிலும் மாலையிலும் சுவாமி புறப்பாடும். மாலையில் தெற்கு வாசல் திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது” என கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் மார்ச் 01ம் தேதி முதல் 12ம் தேதி வரை மஹாசிவராத்திரி திருவிழா நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahashivarathri festival ,Rameswaram Ramanathaswamy Temple ,Ramanathapuram ,Rameswaram Ramanathaswamy ,Temple ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...