×

போடியில் பிளாஸ்டிக் பொருட்கள் 80 கிலோ பறிமுதல்

 

போடி, பிப்.24: போடி நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை சேர்ந்து நேற்று அதிரடி சோதனை செய்தனர். நகராட்சி எல்லை பகுதியான காமராஜ் பஜார், பெரியாண்டவர் ஹைரோடு ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்டுள்ள 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது,

இந்த ஆய்வில் துப்புரவு அலுவலர் மணிகண்டன், துப்புரவு ஆய்வாளர்கள் கணேசன், சுரேஷ்குமார், அகமது கபீர் பங்கேற்றனர். கமிஷனர் ராஜலட்சுமி கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி பதுக்கி வைப்பதும் விற்பதும் குற்றமாகும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றார்.

The post போடியில் பிளாஸ்டிக் பொருட்கள் 80 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Municipalities ,Food Safety Department ,Bodi Nagar ,Kamaraj Bazar ,Periyandawar High Road ,Dinakaran ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...