×
Saravana Stores

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர்: வேலூர், ராணிப்ேபட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கலப்படம், காலாவதியான ெபாருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எது உண்மையான பொருள்? எது போலியான பொருள் என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அங்கேறி வருகிறது. தற்போது உணவுப்பொருட்களிலும் இந்த கலப்படம் நாளக்கும் நாள் அதிகரித்து வருகிறது. பிரபல நிறுவனங்களின் பெயரிலேயே பல்வேறு கலப்பட பொருட்கள் விற்பனை செய்கின்றனர். மசாலா பாக்கெட்கள், தின்பண்டங்கள் போன்ற உணவுப்பொருட்கள் பல மாதங்களாக விற்பனையாகாமல் ஸ்டாக் வைத்து, காலாவதி ஆனது கூட தெரியாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

பொருட்களை வாங்கும் சிலர் அந்த பாக்கெட்களில் உள்ள காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர். காலாவதி தேதியை பார்க்க தெரியாத சிலர் அந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல்நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உணவு பொருள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அந்த உணவு பொருட்களில் நிறுவனத்தின் பெயர், விலாசத்தை மட்டும் பெரிதாக காட்டுகின்றனர். ஆனால் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை உள்ளிட்டவைகளை கண்ணுக்குத் தெரியாத வகையில், ஏதாவது ஒரு மூலையில் பாக்கெட்களில் பிரின்ட் செய்கின்றனர்.

சில உணவுப்பொருட்களில் காலாவதி தேதி இல்லாமல் விற்கின்றனர். காலாவதி உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர். கோதுமை மாவுடன் மைதா மாவை கலப்பது, மிளகுடன் பப்பாளி விதைகளை கலப்பது, சிறுதானியங்களில் மண் கலப்பது என உணவு பொருளில் கலப்படம் அதிகரித்துள்ளது. கலப்படம், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கலப்படம், காலாவதி உணவுப் பொருட்கள் குறித்து மளிகை கடை, பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உணவுப்பொருள் பாக்கெட்களில் உற்பத்தி மற்றும் பேக்கிங் தேதி, எடை, விலை குறிப்பிடாமல் விற்பது கண்டறியப்பட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவுப்பொருட்களில் கலப்படத்தை கட்டுப்படுத்த வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் தோறும் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

கிராமப்புறங்கள், சிறிய, சிறிய கடைகளில் கலப்பட பொருட்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். அதோடு, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். உணவு பொருட்களில் கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு தண்டணை பெற்று தரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ranipetta ,Tirupathur ,Food Safety Department ,Ranibeppatta ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை முன்னிட்டு...