×

மேலைச்சிவபுரி கல்லூரியில் காவிரி இளைஞர் இலக்கிய திருவிழா

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் காவிரி இளைஞர் இலக்கியத்திருவிழா நடைபெற்றது. பொதுநூலகத்துறை, புதுக்கோட்டை நூலக ஆணைக்குழு மற்றும் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய காவிரி இளைஞர் இலக்கியத்திருவிழாவிற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர்க்கு பேச்சுப்போட்டி, வினாடி வினா, ஒவியப்போட்டி, உடனடி ஹைக்கூ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகிகள் வழங்கினர். மேலும் கல்லூரி மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் வகையிலும், புத்தக வாசிப்புத்திறனை மேம்டுத்தும் வகையிலும் பேச்சாற்றல் பயிற்சி, நூல் அறிமுகம், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. பொன்னமராவதி கிளை நூலக நூலகர் ராமகிருஷ்ணன், நூலகர்கள் துரைராஜ், சுசிலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

 

The post மேலைச்சிவபுரி கல்லூரியில் காவிரி இளைஞர் இலக்கிய திருவிழா appeared first on Dinakaran.

Tags : Cauvery Youth Literary Festival ,Upper Chivapuri College ,Ponnamaravati ,Melaichivapuri Ganesar ,Arts ,Science College ,College ,for Cauvery Youth Literary Festival ,Public Library Department ,Pudukottai Library Commission ,Upper Chivapuri Ganesar College of Arts and Sciences ,Cauvery Youth Literature Festival ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் கடையில் தீ