×
Saravana Stores

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு வளர்ச்சி இலக்கு குறித்த பயிற்சி

 

பொன்னமராவதி,ஜூலை 24: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடந்தது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பயிற்சி இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஆயிசா ராணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பயிற்றுநர்கள் சிவகுமார், பாலசுந்தரம் ஆகியோர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் ஆரோக்கிய சகாயராஜ் செய்தார். கலந்து கொண்ட அனைத்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் கையேடு ,குறிப்பேடு, உபகரணங்கள் வழங்கப்பட்டது. இரண்டு நாளும் கலந்து கொண்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு வளர்ச்சி இலக்கு குறித்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati Panchayat Union Office ,Ponnamaravati ,Panchayat ,Ponnamaravati Panchayat Union ,Dinakaran ,
× RELATED மாநில நீளம் தாண்டும் போட்டிக்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு விழா