×

போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி

சேலம்: சேலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் பாஷா (49). இவரது தந்தை தம்சுதீன். இவருக்கு சொந்தமான நிலத்தில், நிசாரூதின், பஷிரியா, ஆய்ஷா பீவி , பாஷா ஆகியோருக்கு பங்கு உள்ளது. இந்நிலையில் தம்சுதீன் கடந்த 2018ம் ஆண்டு இறந்துவிட்டார். அந்த நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டும் என பாஷா கேட்டார். அப்போது, போலி ஆவணங்கள் தயாரித்து 7பேர் அந்த நிலத்தை மோசடி செய்திருப்பது தெரிந்தது. இதுபற்றி சூரமங்கலம் காவல்நிலையத்தில் பாஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போலியாக ஆவணம் தயாரித்து நிலத்தை மோசடி செய்ததாக ஜீனத்பேகம், பல்கீஸ், முகமது சலீம், முகமது கலீல், முகமது ஷாநவாஸ், முபாரக், முகமது கபூர் ஆகிய 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Salem ,Pasha ,Salem Zakir Chinnammapalayam ,KK ,Nagar ,Tamsuddin ,Nisaruddin ,Bashiriya ,Aisha Bivi ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!