×

பல்லடம் கடையில் தீ விபத்து

 

பல்லடம், பிப்.24: கோவையை சேர்ந்த அமான் என்பவர் பல்லடத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிரே கடந்த 5 வருடங்களாக கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் கருவிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். நேற்று அமான் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு தொழுகைக்காக பெரிய பள்ளிவாசலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, பூட்டியிருந்த கடைக்குள் திடீரென புகை வருவதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கடையில் முன் பக்க கண்ணாடியை உடைத்து கடைக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் கடை முழுவதும் தீ பரவியதால் உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கருவிகள் எரிந்து சேதமடைந்த. கூடுதலாக தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

The post பல்லடம் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Palladam ,Aman ,Coimbatore ,Government Hospital ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு