×

பிரதமர் மோடி பிப்.27ல் பல்லடம் வருகை திருச்சி-கோவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

 

பல்லடம், பிப்.24: பல்லடத்திற்கு 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பல்லடம் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து பல்லடம் போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக செல்ல வேண்டும்.

பல்லடம் வழியாக மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.திருச்சி, கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவிநாசி வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர்பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவிநாசி பாளையம், வழியாக செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.

அதேபோல், கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகு ரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளக்கோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவிநாசி வழியாக செல்ல வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி பிப்.27ல் பல்லடம் வருகை திருச்சி-கோவை சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Palladam ,Trichy-Coimbatore road ,Palladam traffic police ,Trichy-Coimbatore National Highway ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!