×

நாயக்கன்சோலை டேன்டீ பகுதிக்கு தார் சாலை அமைக்காவிட்டால் 4ம் தேதி முற்றுகை போராட்டம்

 

பந்தலூர்,பிப்.24: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகம் டேன்டீ நாயக்கன்சோலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் தார்சாலை கடந்த 2019-20 ஆண்டில் பெய்த கனமழைக்கு சேதமடைந்து, தற்போது சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சேரங்கோடு ஊராட்சி மற்றும் கிராமசபை கூட்டங்களில் பலமுறை புகார் மனு அளித்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க வலியுறுத்தி 4ம் தேதியன்று சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்துள்ளனர்.

The post நாயக்கன்சோலை டேன்டீ பகுதிக்கு தார் சாலை அமைக்காவிட்டால் 4ம் தேதி முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dandee ,Naikkansolai ,Bandalur ,Dandee Nayakkancholai ,Tamil Nadu Government Tea Estate Corporation ,Serangode ,Panchayat ,Gudalur Panchayat Union ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா