×
Saravana Stores

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: மாஞ்சோலை விவகாரத்தை தமிழக அரசு மனிதத் தன்மையோடு அணுக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த முன்வர வேண்டும். அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாஞ்சோலையிலிருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Madurai ,High Court ,Tamil Nadu government ,Mancholai ,Dandee ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...