×

கண்மூடித்தனமா பின்தொடரும் தொண்டர்கள்: எடப்பாடி லெட்டர்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதம்: அதிமுக அடிமட்டத் தொண்டர்களுக்கான இயக்கம். எந்த தொண்டருக்கும், எந்த நேரத்திலும் உரிய வாய்ப்பு உரிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும். அடிப்படை தொண்டர் எவ்வித பிரதிபலனும் பாராமல் உண்மையாக பணியாற்றி வரும்போது, அவர் எதிர்பார்க்காத நேரத்தில் உச்சபட்ச பதவியை இந்த இயக்கம் வழங்கும். அதுதான் வரலாறு. இயக்கம் எடுக்கின்ற முடிவே என்னுடைய முடிவு என்று கண்மூடித்தனமாக பின் தொடர்கின்ற தொண்டர்களை பெற்றிருக்கிற கட்சி இது. இரவு, பகல் பாராமல் தேர்தல் வேலை பாருங்க. வெற்றி மாலைகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார்.

The post கண்மூடித்தனமா பின்தொடரும் தொண்டர்கள்: எடப்பாடி லெட்டர் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Movement for AIADMK ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்