×

உலக அன்னை மொழி தினம்

ஊட்டி : ஊட்டி ஒய்எம்சிஏ மற்றும் பாவேந்தர் இலக்கியப்பேரவை சார்பில் உலக அன்னை மொழி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவியரின் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒய்எம்சிஏ செயலர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். தமிழிலக்கிய பகுதியான பிள்ளைத்தமிழ் பற்றி புலவர் சோலூர் கணேசன், கதை சொல்லி நிகழ்வில் கதை சொல்லி நீலகிரி நிர்மலா, தொன்மைத்தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் ஜனார்தனன் ஆகியோர் உரையாற்றினர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தமிழ் நூல்கள் வழங்கப்பட்டன. ஒய்எம்சிஏ பள்ளி தலைமையாசிரியர் எப்சிபா, பொருளாளர் தனசிங், உறுப்பினர் லேம்பார்ட ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் ஆசிரியர் ஜாக்கியா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை புலவர் நாகராஜ் தொகுத்து வழங்கினார்.

The post உலக அன்னை மொழி தினம் appeared first on Dinakaran.

Tags : World Mother Language Day ,Ooty: ,Ooty ,YMCA ,Bhavendra Literary Council ,Thirukkural ,Max Williard Jayaprakash ,Pillaithamil ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்