×

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 50காசுகள் குறைந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. இன்றைய (பிப்ரவரி 23) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,795 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,265ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,120-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.76.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...