×

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை: கடந்த 4 நாளில் ரூ.3160 சரிவு… நகை வாங்குவோர் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை கணிசமான அளவு குறைந்தது. இந்த காரணங்களால் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து, கடந்த 22ம் தேதி ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ,275-ம், சவரனுக்கு ரூ.2,200ம் குறைந்தது.

இது தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறை என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கம் விலை இறங்குமுகத்திலேயே இருந்தது. அதன்படி, நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.6,490க்கு விற்பனை ஆனது. நேற்றும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தது பொதுமக்கள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இன்றும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,415-க்கும் சவரன் ரூ.51,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை 4 நாட்களில் சவரனுக்கு ரூ.3160 குறைந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் நகை கடைகளுக்கு தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. இதேவேளையில் அடுத்த சில மாதங்கள் திருமண சீசன், தீபாவளி என தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விலை சரிவைப் பயன்படுத்திக் கொண்டு முன்கூட்டியே தங்கத்தை வாங்க மக்கள் அவசர அவசரமாக நகை கடைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

The post தாறுமாறாக குறைந்த தங்கம் விலை: கடந்த 4 நாளில் ரூ.3160 சரிவு… நகை வாங்குவோர் மகிழ்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,EU ,Dinakaran ,
× RELATED மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என...