×

தொழிலாளி மீது தாக்குதல்

சேலம், பிப்.23: சேலம் வேடுகத்தாம்பட்டி பாறைவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(39). இவர் சமயபாலன் என்பவரது வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். அப்போது ₹90ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய அவர், சரியாக வேலைக்கு வரவில்லை. இதனால் சமயபாலன், மாரியப்பனை கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் மாரியப்பன் தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சமயபாலன் மீது கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் சமயபாலன் தன்னை மாரியப்பன் தரப்பினர் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் மாரியப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Mariyappan ,Vedugathampatti Bhikhavattam ,Samayapalan ,Mariappan ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!