×

சிறுவனிடம் பாலியல் சீண்டல்: 2 திருநங்கைகளுக்கு ஆயுள்: தமிழ்நாட்டில் முதல்முறை

சேலம்: தமிழ்நாட்டில் முதன்முறையாக சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தான். வாரத்திற்கு ஒரு முறை ஓட்டல் லீவு அன்று நண்பர்களுடன் விளையாடுவதற்கு செல்வான். இவ்வாறு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் விளையாட சென்ற சிறுவன் மிகுந்த சோர்வுடன் வீட்டிற்கு வந்தான். இதனால் சந்ேதகம் அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது, 2 திருநங்கைகள், சிறுவனிடம் நைசாக பேசி, பிரியாணி வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இனிமேல் யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என்று மகனுக்கு அறிவுரை கூறினர்.

இந்நிலையில் மீண்டும் விளையாடச் சென்ற சிறுவனை அதே திருநங்கைகள் ஏமாற்றி அழைத்துச் சென்று 4 மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின்பேரில் காக்காபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக்(எ) காயத்ரி (26), முல்லை (25) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவே முதன்முறையாகும். இவர்கள் இருவரையும் போலீசார் கோவை பெண்கள் சிறைக்கு கொண்டு சென்றனர்.

The post சிறுவனிடம் பாலியல் சீண்டல்: 2 திருநங்கைகளுக்கு ஆயுள்: தமிழ்நாட்டில் முதல்முறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Salem ,Salem POCSO Court ,Kakkapalayam ,Salem district ,
× RELATED வாக்குச்சாடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்