×

பிளஸ் 1 மாணவி தற்கொலை: பலாத்கார புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கராத்தே பயிற்சியாளர் மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஊர்க்கடவு பகுதியை சேர்ந்தவர் சித்திக் அலி (43). கராத்தே பயிற்சியாளர். தனது வீட்டில் வைத்து கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இவரிடம் கராத்தே படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அவரிடம் கராத்தே படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிளஸ் 1 மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை திடீரென மாயமானார். தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். அப்போது மாணவியின் உடல் அங்குள்ள ஆற்றில் மிதந்தது தெரியவந்தது.இது குறித்து அறிந்ததும் வழக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தங்களது மகளின் சாவுக்கு கராத்தே பயிற்சியாளர் சித்திக் அலி தான் காரணம், அவர் பலமுறை மகளை பலாத்காரம் செய்து உள்ளார் என்றும் பெற்றோர் போலீசில் கூறினர்.அதைத்தொடர்ந்து சித்திக் அலியை போலீசார் கைது செய்தனர்.

The post பிளஸ் 1 மாணவி தற்கொலை: பலாத்கார புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Karate ,Thiruvananthapuram ,Malappuram ,Kerala ,Siddique Ali ,Urkkadau ,Malappuram, Kerala.… ,
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...