×

வீட்டுக்குள் நுழைந்து 4 வயது சிறுமியை கடத்த முயற்சி வாலிபரை பிடித்து ேபாலீசில் ஒப்படைத்த மக்கள் வந்தவாசியில் பரபரப்பு

வேலூர், பிப்.22: வந்தவாசியில் நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்ற போதை ஆசாமியை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் ஆலமரத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு அத்தியா(4) என்ற பெண் குழந்தையும், 2 மகன்களும் உள்ளனர். குழந்தைகள் பாட்டி சோபியாவின் பராமரிப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சோபியா வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராஜாவும், அவரது மகன்களும் வீட்டின் உள்பக்கம் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அத்தியா தூங்கிக் கொண்டிருந்த தொட்டில் ஆடிக் கொண்டிருந்தது. அங்கு பார்த்த போது ஒரு ஆசாமி வீட்டுக்குள் நைசாக நுழைந்து அத்தியாவை தூக்கிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேற முயன்றான். இதனால் அனைவரும் திடுக்கிட்டு கூச்சலிட்டவாறே அவனை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த ஆசாமி குழந்தையை கீழே போட்டுவிட்டு வெளியே ஓடி தனது மொபட்டை ஸ்டார்ட் செய்து தப்ப முயன்றான்.

அதற்குள் சோபியா எதிர்வீட்டில் உள்ள உறவினருக்கு போன் செய்து தகவல் கூறவே அவர்களும், தெருவில் உள்ளவர்களும் திரண்டு மொபட்டை எடுக்க முயன்ற கடத்தல் ஆசாமியை பிடித்து சரமாரியாக தாக்கி வந்தவாசி தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். அவனை வந்தவாசி தெற்கு போலீசார் சோதனையிட்டபோது அந்த ஆசாமி முழுமையான மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் வந்தவாசி தாலுகா சத்தியவாடி கிராமத்தை சேரந்்த மாரிமுத்து(40) என்பதும், அவனுக்கு 2 மனைவிகள் இருப்பதும் தெரிய வந்தது. குடும்பத்தகராறு காரணமாக வந்தவாசி காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த நிலையில் அதை மறந்து குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அங்கு நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டுக்குள் நுழைந்து 4 வயது சிறுமியை கடத்த முயற்சி வாலிபரை பிடித்து ேபாலீசில் ஒப்படைத்த மக்கள் வந்தவாசியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vandavasi ,Raja ,Alamaratheru, Vandavasi ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு