×

டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி

சேந்தமங்கலம், பிப்.22: விழுப்புரம் மாவட்டம், கங்கைனூரைச் சேர்ந்தவர் முனியன். இவரது மகன் ரகுமான் (28). திருவண்ணாமலை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த தனபால் மகன் ராஜா (25). இருவரும் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். கடந்த 18ம் தேதி காலை, இருவரும் டூவீலரில் சேந்தமங்கலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது காந்திபுரத்தைச் சேர்ந்த ஞானசேகர் (27), சேந்தமங்கலம் வந்து கொண்டிருந்தார். தனியார் வேபிரிட்ஜ் அருகே இருவரது டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரகுமான், ராஜா இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ராஜா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kangainur, Villupuram district ,Raghuman ,Dhanapal Makan Raja ,Thiruvannamalai MGR Nagar ,Akyampatti ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்