×

மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.10,500க்கு விற்பனை

ஈரோடு: மரவள்ளி கிழங்கு ஒருபோது டன்னுக்கு ரூ.10,500க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சிவகிரி, அந்தியூர், நாமக்கல், சேலம், கரூர் உட்பட பல பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.10,500க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அறுவடை பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: தை பொங்கலுக்கு முன்பு வரை மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.10,00க்கு கீழ் விற்பனையானது. தற்போது, ரூ.500 உயர்ந்து, ரூ.10,500 ஆக நீடிக்கிறது. இதனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் மரவள்ளி கிழங்கு அறுவடை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

The post மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.10,500க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Kodumudi ,Sivagiri ,Anthiyur ,Namakkal ,Salem ,Karur ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!