×

ராஞ்சி டெஸ்ட்டில் ராகுல் இல்லை: பும்ராவுக்கு பதில் முகேஷ்

ராஞ்சி: இங்கிலாந்து அணியுடன் ராஞ்சியில் நடக்க உள்ள 4வது டெஸ்ட்டில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் கே.எல்.ராகுல் களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளரும் துணை கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுலும் ராஞ்சி டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது டெஸ்ட் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.

இப்போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு முக்கிய வீரர்கள் ஓய்வை விரும்புகின்றனர். ஜூன் மாதம் டி20 உலக கோப்பை வேறு நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ராஞ்சி டெஸ்டில் அணி நிர்வாகம் ஓய்வு அளித்துள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட்டுக்கு பிறகு காயம் காரணமாக களம் காணாத கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால், அவர் ராஞ்சி டெஸ்ட்டில் ஆட மாட்டார் என்பதை நிர்வாகம் நேற்று உறுதி செய்துள்ளது. கடந்த 10 மாதங்களாக ராகுல் உடல்தகுதி பிரச்னையால் அணிக்கு உள்ளே வெளியே என வந்து போய் கொண்டிருக்கிறார். இப்படி முக்கிய வீரர்கள் அணியில் இல்லாததால் இளம் வீரர்களுக்கு நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ராகுலுக்கு பதிலாக ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், பும்ராவுக்கு பதிலாக மீண்டும் முகேஷ் குமார் களமிறங்க உள்ளனர்.

The post ராஞ்சி டெஸ்ட்டில் ராகுல் இல்லை: பும்ராவுக்கு பதில் முகேஷ் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Ranchi Test ,Mukesh ,Bumrah ,Ranchi ,KL Rahul ,England ,Jasprit Bumrah ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு