×

பெட்டிக்கடையில் திருட்டு பணம் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் ரோடு, கருவம்பாளையம் அடுத்த தாடிக்கார மூக்கு பகுதியில் சரவணன் (33) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பெட்டிக்கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி ரூ.6 ஆயிரம் பணம் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஜேஎம்-2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பெட்டிக்கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடிய மணிகண்டனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பழனிக்குமார் உத்தரவிட்டார்.

The post பெட்டிக்கடையில் திருட்டு பணம் திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Saravanan ,Mangalam Road ,Karumpalayam ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்