×

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனையை வலியுறுத்தி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்கரண்டாம்பாளையம் கிராமம் கருங்காலி வலசு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கருப்புக்கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயற்கை விவசாய அணி துணை செயலாளர் சங்கரண்டாம்பாளையம் தனபாலன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

The post ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனையை வலியுறுத்தி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tarapuram, Tirupur district ,Tamil Nadu Farmers Protection Association ,Karungali Valasu ,Sankarandampalayam ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை