×

தாராபுரம் அருகே வழித்தடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தர கோரிக்கை

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லப்பநாயக்கன் வலசு ஜேஜே நகர் பகுதியில் குடியிருக்கும் ஏழை விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கடந்த 1993ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு அதில் 71 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு போக்குவரத்து பாதையாக ஒதுக்கப்பட்ட இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் போலியாக பட்டா பெற்று பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து அதில் வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 71 குடும்பங்களின் பொது நடைபாதை போக்குவரத்து தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post தாராபுரம் அருகே வழித்தடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Ellappanayakan Valasu JJ Nagar ,Kulatuppalayam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...