×

ஓய்வு பெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பை வெளியிடுவதா: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கடந்த 2017 மே 26ம் தேதி ஓய்வு பெற்றவர் நீதிபதி டி. மதிவாணன். இவர் ஓய்வு பெறும் முன்பு ஒரு கிரிமினல் வழக்கில் ஒரு வரியில் தீர்ப்பு வழங்கினார். அதன்பின் அந்த தீர்ப்பு முழுவிவரத்தை 5 மாதம் கழித்து வெளியிட்டார். அந்த தீர்ப்பு 2017 அக்டோபர் 23ம் தேதி வெளியானது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்க வந்தது. அப்போது ஓய்வுபெற்ற 5 மாதங்களுக்குப் பிறகு கிரிமினல் வழக்கில் தீர்ப்பை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணனை உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறுகையில்,’ பதவியில் இருந்து விலகிய பிறகு ஐந்து மாதங்களுக்கு ஒரு வழக்கின் கோப்பை வைத்திருப்பது மிகவும் முறையற்ற செயல்.

நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தீர்ப்பை தயார் செய்தது முறைகேடு ஆகும். எனவே நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், நிறைவேற்றப்படுவதையும் நாம் பார்க்க வேண்டும். அந்த தீர்ப்பை ரத்து செய்து, வழக்குகளை உயர் நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றுவதுதான் ஒரே வழி. எனவே அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓய்வு பெற்று 5 மாதம் கழித்து தீர்ப்பை வெளியிடுவதா: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,CHENNAI ,COURT ,MATIWANAN ,NEW DELHI ,T.D. ,COURT OF ,Chennai High Court ,Judge ,Metivanan ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...