×

3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள்

சென்னை: கடந்த ஆண்டில் சென்னையிலும், திருச்சியிலும் நடத்தப்பட்ட வேளாண் கண்காட்சிகளுக்கு விவசாயிகள், பொதுமக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து, 2024-25லும், 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும். இதற்கென ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில், 25 வட்டாரங்களிலுள்ள 275 நீர்வடிப்பகுதிகளில், ரூ.43 கோடி மதிப்பீட்டில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள், உற்பத்திப் பணிகள், வாழ்வாதாரப் பணிகள் ஆகியவை நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் 2024-25ம் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

The post 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Trichy ,Perambalur ,Thoothukudi ,Krishnagiri ,Ramanathapuram ,Dharmapuri ,
× RELATED நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென...