×

திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் ஊட்டி நகரம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

ஊட்டி, பிப்.19: ஊட்டி நகரில் பொது இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலைைய அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர கிராம பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கான ஏராளமான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அவசர தேவைகளுக்காக நகரின் பல பகுதிகளில் கழிப்பிடங்கள் உள்ளன. ஆனால் அவை போதிய பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கட்டண கழிப்பிடங்களை தவிர்ந்து வருகின்றனர். இதனால் ஊட்டி நகரில் உள்ள எட்டின்ஸ் சாலையோரம், காந்தி மைதானம், ஏடிசி, பார்க்கிங் தளம், மத்திய பஸ் நிலைய பகுதிகள், சேரிங்கிராஸ், மார்க்கெட் அருகேயுள்ள பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடங்களாக மாறியுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஊட்டிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊட்டியில் உள்ள நகராட்சி கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூல், மோசமான பராமரிப்பு போன்ற காரணங்களால் ஊட்டி நகரமே திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றனர்.

The post திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வரும் ஊட்டி நகரம் நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்