×

குடும்ப வாழ்வில் கொடுத்து வைத்த மிதுன ராசியினர்

மிதுனராசி, ரெட்டை ராசி. எனவே இவர்களுக்கு ஆண் – பெண் என்ற பண்புகளும் கலந்திருக்கும். இவர்கள் புதன் ராசி என்பதால், புத்திசாலியாக நடந்துகொள்வர். இவர்கள் பெரும்பாலும் துலாம் மற்றும் கும்ப ராசியினருடன் நட்பாக இருப்பார்கள். கடகம், விருச்சிகம், மீனம் போன்ற நீர் ராசிகளுடன் அதிகம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.

நட்பு வட்டாரங்கள்

மிதுன ராசியினர் கலகலவென்று பேசக்கூடியவர்கள் என்பதால், இவர்கள் பேச்சை ரசிக்கக் கூடியவர்களே இவர்களுடன் நட்பு கொள்ள முடியும். நண்பர்களுக்குத் துன்ப காலங்களில் உறுதுணையாக நிற்பார். நண்பர்களின் திருமணங்கள் நடக்கும் போது அல்லது அவர்களின் வீட்டு விசேஷங்களில் இரண்டு நாள் முன்பிருந்தே அவர்களின் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு அந்த வீட்டுப் பிள்ளையாகவே இருப்பார். ஏழை பணக்காரர் என்ற எந்த சாராரிடமும் வித்தியாசம் பார்க்காமல், நட்பு வைத்து அவர்கள் நம்பும்படியாக நல்ல விதத்தில் பழகினாலும், வசதியாக வாழ வேண்டும் என்பதில் கருத்தும் கவனமாக இருப்பார்.

நோ சென்ட்டிமென்ட்ஸ்

புதன் ராசிக்காரர் என்பதால், இவர்களிடம் சென்டிமென்ட் மோகம் கிடையாது. இந்த இடம் ராசி இந்த உடை ராசி என்ற நம்பிக்கை எல்லாம் இவருக்குக் கிடையாது. இதனால் பலர் இவரை இரக்கமற்றவர் என்று நினைக் கலாம். ஆனால், இவர் அறிவுக்கு இடம் கொடுப்பவர். உணர்ச்சிகளுக்கு அல்ல. மூடநம்பிக்கைகளுக்கு அல்ல.

காதல் தோல்வி

மிதுன ராசிக்காரர் லட்சியவாதி அல்ல. யதார்த்தவாதி. எனவே, இவர் காதல் முறிவை சகஜமாக எடுத்துக் கொள்வார். வீட்டில் பார்க்கும் பெண் வசதியானவளாக இருந்தால் அல்லது முறை பெண்களைத் திருமணம் செய்ய வேண்டி இருந்தால், குடும்பத்தை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று திருமணத்துக்கு ஒப்புக்கொள்வார். காதலியிடமும் பேசி சம்மதம் பெற்றுவிடுவார்.

கலா ரசிகர்
மிதுன ராசிக்காரர் நல்ல கலா ரசிகர். ஆனால், சிலருடைய வாழ்வில் இவர்களின் வாழ்க்கைத் துணைக்கும் ரசனைக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இவருடைய மனதைக் கவரும் எந்த கலை பற்றியும் இவர் வாழ்க்கைத் துணைக்கு ஒரு அட்சரம்கூட தெரியாமல் இருக்கும். ஆனாலும், அதை இவர் பெரிதுபடுத்த மாட்டார். `அது அவ்வளவுதான்’ என்று எதார்த்தமாக எடுத்துக்கொள்வார். அது ஒரு ஞானசூனியம் என்று வசை பாட மாட்டார்.

பொதுவாக புதன் ராசிக்காரர்கள், திரைப்படப் பாடல்கள், கர்நாடக சங்கீதம் திரைப்படங்கள், அதன் கதை, காட்சி அமைப்பு, ஆடல் பாடல் என்று அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து அணுஅணுவாக ரசிக்கும் பழக்கம் உடையவர்கள். இவர்களின் நண்பர் கூட்டமும் இவர்களின் ரசனையை பார்த்து வியந்து ஆமாம் சாமி போட்டு தலையாட்டிக் கொண்டிருக்கும். ஆனால், இவர்களின் வாழ்க்கைத் துணை இவருடைய ரசனைக்கு பொருந்தாததாக அமையக்கூடும். ஆனால், அது இவருக்கு ஒரு பிரச்னையாகவே இருக்காது. வாழ்க்கையில் வசதி வாய்ப்பு முக்கியம். அதுவே நிரந்தர நிம்மதியை தரும் என்பதில் இவர் உறுதியாக இருப்பதால், இவருடைய ரசனைகளுக்கான தீனியை இவர் வெளியே தேடிக் கொள்வார்.

பொருந்தாத ராசிகள்

ரிஷபம், துலாம், மகரம் ஆகியவை கொஞ்சமும் பொருந்தாது. இந்த ராசிகளுக்கிடையே திருமணம் நடந்தால், அவர்கள் ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனியாகத்தான் செயல்படுவார்கள். மிதுனராசிக்காரர்கள் விவாகரத்து பெறுவதோ பிரிந்து வாழ்வதோ கிடையாது. ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவார்கள். ஒரே வீட்டில்கூட சண்டையிடாமல், ஒருவருக்கு ஒருவர் பேசாமல், பத்து இருபது ஆண்டுகள்கூட வசிப்பார்கள்.

-முனைவர் செ.ராஜேஸ்வரி

சர்ப்ரைஸ் பிரியர்
காதலியருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துவதில் மிதுன ராசிக்காரர்களை மிஞ்ச ஆள் கிடையாது. மற்றவர்கள் இவர் களைப் பார்த்து வியக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பார். கவிதை எழுதி அசத்துவார். ஓவியம் வரைந்து அசத்துவார். திடீரென எதிர்பாராத நேரத்தில் வந்து நின்று அசத்துவார். திடீரென ஒரு சுற்றுலாத் திட்டம் வகுத்து தனது காதலர் அல்லது காதலியை எங்கேயாவது ஊர்சுற்ற அழைத்துச் செல்வார்.

The post குடும்ப வாழ்வில் கொடுத்து வைத்த மிதுன ராசியினர் appeared first on Dinakaran.

Tags : Mercury ,
× RELATED மாசி மகத்தையொட்டி பூம்புகார் கடற்கரையில் தீர்த்தவாரி