×

மேக்ஸ்வெல் அதிரடியில் தொடரை வென்றது ஆஸி.

அடிலெய்டு: வெஸ்ட் இண்டீசுடன் அடிலெய்டில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில், 34 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச, ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 120* ரன் (55 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன் சேர்த்து தோல்வியைத் தழுவியது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற மேக்ஸ்வெல் சர்வதேச டி20ல் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மாவின் சாதனையை (5 சதம்) சமன் செய்துள்ளார். சூரியகுமார் (4 சதம்) 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த் அரங்கில் நாளை காலை 11.00 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

 

The post மேக்ஸ்வெல் அதிரடியில் தொடரை வென்றது ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Australia ,Maxwell ,Adelaide ,West Indies ,Aussies ,Dinakaran ,
× RELATED லயன் சுழலில் மூழ்கியது நியூசிலாந்து; 172...